பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் இருந்து மூன்றடி மண்ணை வேண்டினார். மகாபலியும் அதைக் கொடுப்பதற்கு கமண்டலத்தில் உள்ள நீரை ஊற்றும்போது அவனது குருவான சுக்ராச்சாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் வாயை அடைத்து விட்டார். திருமால் ஒரு குச்சியால் துவாரத்தில் குத்த, சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் அழிந்துவிட்டது. அதனால் சுக்கிரன் இந்த தலத்திற்கு பெருமாளை வந்து வழிபட்டதால் 'வெள்ளியங்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் கோலவில்லி ராமன் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் சிருங்கார சுந்தரன். தாயாருக்கு மரகதவல்லி என்னும் திருநாமம். பூமி தேவி, பரசுராமன், பிரம்மா, இந்திரன், சுக்கிரன், மயன், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலில் உள்ள கருடாழ்வாரின் கைகளில் சங்கு சக்கரங்கள் இருக்கின்றன. இவ்வூரின் அருகில் உள்ள சேங்கனூரில்தான் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்தார்.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|